நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய் " என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தே ்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிற ய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!. .
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....