என்னவரே..
உன் திருமுகத்தை.. ஒருமுகமாக்கி..
என் அகக்கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் பசுமையான நினைவுகளை
இதயத்துக்குள் பதியமிட்டு பாதுகாக்கிறேன்.
என்னை நானே இத்தனை தயார் செய்தும்
பொருள் தேடி தூர தேசம் செல்லும் உன்னை
பிரிய மறுக்கிறது 'மனசு'