ஒரு துளி வியர்வை

தெருப் பிள்ளையாருக்கு
நூறு தேங்காய்
திரிசூலம் கற்பகாம்பாளுக்கு ்
பாவாடைச் சுற்றல்
ஆபீஸ் பியூன் அந்தோணி
சொன்னாரென்று
வேளாங்கண்ணி மாதாவிடம்
வேண்டுதல்
நண்பர் நஜ்முதீனுக்காக
நாகூர் ஆண்டவருக்கு
சந்தனக் குடம் ஆன
அதிர்ஷ்டம் வேண்டி
அத்தனையும் செய்தார்கள், கூடவே
உழைப்பிற்காக
ஒரு துளி வியர்வை சிந்தியிருக்கலாம .....