நண்பனே...

பூ என்ற ஒரு எழுத்தில்

நார் என்ற இரண்டு எழுத்து கலந்து

பூமாலை ஆவது போல்...

நட்பு எனும் மூன்று எழுத்தில்

நண்பன் எனும் நான்கு எழுத்து கலந்து

என் வாழ்வில் சந்தோஷம் எனும் ஐந்து எழுத்தை

ஆறாக ஓட விட்டு.. ஏழு ஜென்மத்திற்கும்

எட்டாத தூரத்தில் இருந்தாலும்

ஒன்பது கிரகங்களையும் தாண்டி

பத்தாவது கிரகம் ஒன்று உருவாக்கி

நட்புடன் நலமாய் வாழ்வோம்...