Page 1 of 9 123 ... LastLast
Results 1 to 15 of 132

Thread: இன்று ஒரு தகவல்

 1. #1
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  இன்று ஒரு தகவல்

  நாம் அறிந்தபடி 21/12/2012 (மாயன் காலச்சுற்று நாட்காட்டி) ஒரு காலச்சுற்றின் (உகம்/யுகம்/age) முடிவேயன்றி அழிவல்ல. சித்தர்கள் கணிப்பின்படி கருமச்சித்தர் காலம் முட...
  ிந்து ஞானச்சித்தர் காலம் தொடங்குகின்றது. இது ஏலவே தொடங்கிவிட்டது. இதையே கலியுகம் முடிந்து சத்யயுகம் பிறக்கின்றது என்று பாரததேச ஞானிகளும் வகுத்துத் தந்துள்ளனர். நாலு உகங்களிலும் மிக மோசமான கலியில் இருந்து நாலிலும் மிக உன்னதமான சத்ய உகம் பிறக்கும் போது உலகலிலுள்ள கசடுகள் நீங்க சில அழிவுகள் நடக்கவே செய்யும். ஆனால், இந்த உலகு அழியாது. நாமறிந்தபடி 2037 வரை மாற்றங்கள் இடம்பெறும். நன்றி.


  ஒரு காலச்சுற்று /உகம்/யுகம்/age பல் ஆயிரம் வருடங்களைக் கொண்டது. ஒரே இரவில் உகமாற்றம் நடைபெறுவதில்லை. ~1000miles/hr(just over 1000miles ~1070m/hr) வேகத்தில் சுற்றும் புவி சுற்றுவதை நாம் எப்படி உணர்வதில்லையோ அவ்வாறே காலச்சுற்று மாற்றத்தையும் மனித உணர்வுகளால்/ அறிவால் உணர்வது கடினம். ஒரு காலச்சுற்று மாற்றம் ஐந்து மானிட சந்ததிகளில் நடைபெறுகின்றது. நன்றி

  The World will not end but some natural calamity will happen in order to purify the mother Earth. Have no fear. Be compassionate towards all living beings.

 2. #2
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  வியந்து தான் போவீர்கள். . !

  *நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

  *சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
  ......
  *பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

  *நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

  *கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

  *மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

  *ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

  *மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

  *பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

  *உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

  *ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

  *பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

  *பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

  *நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

  *நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

  *யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

  *ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

  *தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

  *முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

  *தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

 3. #3
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  .வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை


  வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த ...உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு ``அடவு வர்மம்'' என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த வர்ம சிகிச்சை, குருகுல வழி முறையில் கொடுக்கப்பட்டது. அதற்காக அகத்தியர் "வர்மக் குடில்'' என்பதை உருவாக்கிவைத்திர ந்தார்.
  அகத்தியரின் தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அவரின் வர்மக் குடில் பயிற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அகத்தியரின் மருத்துவ சேவையை கண்டு உணர்ந்த பாண்டிய மன்னர் வீரத்தளபதிகளுக்க ம், இளவரசர்களுக்கும் வர்மக்கலையின் ரகசியங்களை கற்றுக் கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதன் மூலமாக தமிழகத்தின் தென்பகுதியில் அகத்தியரின் தமிழ் வர்மக்கலை கொடி கட்டி பறந்தது.
  நமது உடலில் 7 விதமான சக்கரங்கள் இயங்குவது போல் நம்முடைய நாடி, நரம்புகளில் 126 சக்கரங்கள் அதாவது வர்ம நிலைகள் உள்ளன.
  அவை:
  * தொடுவர்மம் - 96
  * படுவர்மம் - 12
  * தட்டுவர்மம் - 8
  * அடங்கல்வர்மம் - 6
  * நக்குவர்மம் - 4
  இந்த வர்ம நிலைகளை மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்குகின்றன. மனிதர்களின் உடல் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு அந்த இடத்தில் உள்சதை முறிவு ஏற்பட்டால் வலி உருவாகும். இந்த வலியை நீக்குவதற்கு முதல் கட்டமாக அடிபட்ட வர்ம நிலையை கலைக்கவேண்டும். பின்பு இளக்கு முறை செய்து விறைப்பாக இருக்கும் தசை பகுதியை தளர்த்தி விடவேண்டும். அதன் பிறகு ஒரு துண்டு சுக்கு, வெற்றிலை, 5 மிளகு ஆகியவைகளை வாயில் போட்டு மென்று, அடிபட்டவரின் மூக்கு துவாரங்களிலும், காது துவாரங்களிலும் ஊதவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்கப்பட்டு, மின் அஞ்சல் செய்தி போல் சமிக்ஞை பெறப்பட்டு, அடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் ரத்தம் வாயு மூலமாக தள்ளப்படும். அதனால் பாதிக்கப்பட்ட இடம் சீராகி, பாதிக்கப்பட்டவர் வலியின் பிடியில் இருந்து விடுபடுவார்.
  ``வர்மம்'' என்ற நான்கு எழுத்துக்குள் பல்வேறு மர்மங்கள் பொதிந்துள்ளன. வர்மம் என்பது, நமது உடலில் உள்ள 126 உயிர் நிலைகளை குறிக்கிறது. மூளைப்பகுதியில் உள்ள நியூரான்களின் கட்டளைப்படி இயங்கும் இந்த உயிர்நிலைகள் தான் மனிதர்களை நோய்களில் இருந்து பாதுகாத்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
  மொத்தமுள்ள ஐந்து வகை வர்மங்களில், படுவர்மம் என்பது நமது உடலில் மிகவும் ஆழமாக குடியிருக்கிறது. தொடு வர்மம் மனித உடலில் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது. மேற்கண்ட இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தட்டுவர்மம் குடி கொண்டுள்ளது.
  வர்மக்கலையில் மிகவும் மர்மமானது, அடங்கல் வர்மமாகும். சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே போதை ஆசாமி ஒருவர் வருகிறார். அவர், அந்த அப்பாவி மனிதரை மூர்க்கத்தனமாக தாக்குகிறார் என வைத்துக்கொள்வோம். வர்மப் பகுதியில் அவருக்கு அடிபட்டிருந்தால், அந்த அப்பாவி உடனே மயங்கிவிழுந்துவி ுவார்.
  இந்த நிலையில் அடங்கல் வர்மங்களின் குணநலன்கள் தெரிந்த வர்மக்கலை நிபுணர் ஒருவர் அங்கு வந்தால், அவரால் அந்த அப்பாவியின் உடலில் உள்ள உயிர் அடங்கல் வர்மங்களில் ஏதாவது ஒருவர்மம் தூண்டப்படுமானால் அவர் மயக்கம் நீங்கி எழுந்துவிடுவார். இந்த செய்கையைத்தான் வர்ம ஆசான்மார்கள் உயிர் அடங்கல் வர்மம் என்று குறிப்பிடுகின்றன ். உயிர் அடங்கியிருக்கும் வர்மம் அடங்கல் வர்மம் எனப்படுகிறது.
  மனித உடலில் விரல்கள் பட்டால் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்ம நிலைகளும் அனேக இடங்களில் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் உள்ள பாதிப்பை நக்கு வர்மம் மூலமாக இளக்கி குணப்படுத்த வேண்டும். இது மிக மென்மையான மருத்துவ அணுகுமுறையாகும்.
  மணிபந்த வர்மம் என்ற தொடுவர்மப்புள்ளி நமது கைகளில் மணிக்கட்டு பகுதியிலிருந்து 2 விரல் அளவு தள்ளி கையின் உள்பக்கம் உள்ளது. ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இந்த வர்மப்புள்ளி குடி கொண்டுள்ளது. இந்த வர்ம புள்ளிகளில் மிதமான முறையில் அடிபட்டால்கூட உளைச்சல் எடுத்து வலி பரவும். இதே வர்ம புள்ளியில் முழு மாத்திரை அளவு அடிபடுமானால், அடிபட்ட கை அப்படியே கீழே தொங்கி விடும். மேலும் விரல்களில் இருந்து முழங்கை வரை பயங்கரமாக உளைச்சல் எடுக்கும். மயக்கமாகி கீழே விழுந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவரி ் முகத்தில் அப்போது வியர்வை கொட்டும். உடம்பெங்கும் ஒருவிதமான சூடு பரவி காய்ச்சல் அடிப்பது போல் இருக்கும்.
  அந்த வர்ம புள்ளிகளில் அடிபடுவதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைப்படும். அப்போது இதய பகுதியை 10 விரல்களால் பிசைவது போல் தோன்றும். அதனால்தான் பாதிக்கப்பட்டவரு ்கு மயக்கமும், வியர்வை வழிதலும் அறிகுறியாகிறது.
  இப்படி வர்ம நிலையில் அடிபட்டு மயங்கி கிடப்பவரை எழுப்புவதற்கு அவரது சிரசு பகுதியில் வர்மக்கலை நிபுணர் நின்றுகொள்வார். அவரது, இடது கையால் பாதிக்கப்பட்டவரி ் உச்சி முடியை பிடித்து தூக்கி உட்கார வைத்து, மிக பலமாக 3 முறை அவரது உச்சி முடியை பிடித்து உலுக்குவார். பின்பு இன்னொருவரை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு, சிகிச்சை அளிப்பவர் அவரது முன்பக்கமாக வருவார். வந்து அவரது இடது உள்ளங்கையை பாதிக்கப்பட்டவரி ் உச்சந்தலையில் தட்டையாக விரித்து வைத்து, முஷ்டி பிடித்த மறுகையால் 3 முறை மிதமான முறையில் தட்டுவார். இப்படி தட்டிவிட்ட பின்பு, சிரசின் கீழ்ப்பகுதியில் சிறிய குழி போல் உள்ள இடத்தில் வலது கையின் பெருவிரலின் முனைப்பகுதியில் 5 தடவை வட்டமான முறையில் தடவி சரி செய்ய வேண்டும்.
  மேற்கண்ட முறையில் வர்ம அழுத்தம் செய்த உடன் மயக்கத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபட்டு விழிகளை திறப்பார். வர்மத்தால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவுக்கு வந்தவுடன் அவரின் விரல்கள் அனைத்தையும் நெட்டி (சொடக்கு) வாங்கி விட்டு, அடிப்பட்ட பகுதியில் காயத்திருமேனி தைலத்தாலோ, நல்லெண்ணெய்யாலோ பூசவேண்டும். பின்பு மேலிருந்து கீழாக வலக்கையின் கட்டை விரலால் 18 தடவை அழுத்தமான முறையில் நீவவேண்டும்.
  நீவி முடித்த உடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தீ மூட்டி, அது நன்கு சூடான பின்பு ஒரு காட்டன் துணியை சதுரமாக மடித்து எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் ஒற்றியெடுத்து அடிப்பட்ட இடத்தில் ``அனல் சிகிச்சை'' என்ற வறத்துணி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை 6 நாட்கள் கடைப்பிடித்து வந்தால் வர்மம் இளகி குணம் கிடைக்கும். இதற்கு கூடுதலாக சில மருத்துவ சிகிச்சை முறைகளும் உள்ளன.
  தெய்வீக கலையான வர்மக்கலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் ளுக்கு சிகிச்சை கொடுக்கும் அதே நேரத்தில் அதை பயன்படுத்தி, வாழ்க்கையை இன்பமாக அனுபவிக் கவும் முடியும். தாம்பத்ய சிக்கல்களை வர்மக்கலை மூலம் குணப் படுத்தி, மகிழ்ச்சியாக இளமை உணர்வோடு வாழலாம்.
  இதன் மூலம் ஆரோக்கியமும் பெருகும். அதுபோல் பெண்களும், ஆண்களும் வர்மக்கலையின் அடிப்படையை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, வர்மப் புள்ளிகளில் தாக்குதல் தொடுத்து தங்கள் உயிரையும், உடமையையும் காப்பாற்றிக்கொள் வும் செய்யலாம்.

  வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட் து.

  இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

  அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

  "அகத்தியர் வர்ம திறவுகோல்"

  "அகத்தியர் வர்ம கண்டி"

  "அகத்தியர் ஊசி முறை வர்மம்"

  "அகத்தியர் வசி வர்மம்"

  "அகத்தியர் வர்ம கண்ணாடி"

  "அகத்தியர் வர்ம வரிசை"

  "அகத்தியர் மெய் தீண்டா கலை"

  ஆகியவை குறிப்பிடத்தக்கவ

  " ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

  காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

  இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாத . இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

  உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதா ் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.


 4. #4
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

  நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

  வர்மமும் கிரேக்கமும்!

  கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

  “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

  தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

  இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறத . “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

  தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

  சீனாவில் வேரூன்றியிருக்கு ் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றத . இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

  1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

  2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும , நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

  3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

  4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

  ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

  உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

  தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்

  நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

  உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்

  முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்

  கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்

  கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

  கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்

  கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

  கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

  இருப்பதாக குறிப்பிட்டிருக் ிறார்.

  வர்மத்தின் அதிசயங்கள் !

  வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

  வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

  ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

  ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

 5. #5
  your informations are very fine sir, thanks once again

 6. #6
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877
  thanks for the possitive coments

  please visit again

  http://

 7. #7
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஈழத் திரைப்படம் ..

  **** தேன்கூடு ****

  இதுவரை தமிழ் ஈழ சம்பந்தமாக பல படங்கள் தமிழகத்தில் வெளிவந்து இருந்தாலும் அவற்றை இந்திய சென்சார் போர்டு பல திரைபடத்தின் பல இடங்களில் கத்திரி இட்டு பின்பு மத்திய அரசு தங்கள் கடமைக்கு இந்திய இறையாண்மை கெடாதவாறு மேலும் பல இடங்களில் திரைப்படத்தை கத்திரி இட சென்சார் போர்டுக்கு ஆணையிட...ும் ..பின்னர் தலையும் புரியாத காலும் புரியாத தமிழ் ஈழ படம் தான் திரை அரங்குகளுக்கு வந்து சேரும் ..

  இந்த தேன்கூடு என்ற படம் " தமிழக இயக்குனர் இகோர்" இயக்கத்தில் அடுத்த மாதம் உலக அரங்குகளில் வெளிவர இருக்கிறது ..அவற்றை இந்தியை அரசு எங்கும் கத்திரி இட முடியாது , கனடா ,பிரான்ஸ் , ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிறு கத்திரி இடமால் வெளியிடபடுகிறது ..எனினும் இப்படத்தை நாம் தமிழகத்தில் காண வாய்ப்பில்லை . இந்த படத்தை மக்களிடம் கொன்று சேர்ப்பதே எமது பணி என்று நாம் தமிழ் கட்சி ஒருகினைபாளர் பல முயற்சிகளை செய்துவருகிறார் , மேலும் திரு வைகோ மற்றும் கொளத்தூர் மணி அவர்களும் இந்த படத்திற்கு முழு ஆதரவை தந்துள்ளனர் ..இப்படம் தமிழகத்தில் வெளியிட முடியதநிலையுளும் ..இவர்களின் மூவரின் துணையோடு இப்பட தட்டுகள் மக்களிடையே DVD தட்டுகளை கொடுத்து புழங்குவது உறுதி ..என்கிறார்கள் ..

  இப்படத்தின் குறும் ( trailer ) வெளியடபடுள்ளது .அவற்றில் தங்கள் கருத்துகளை ( Trailer ) திரு -சீமான் அவர்கள் படத்தின் டிரைலருக்கு முன்பும் ...திரு வைகோ அவர்களும் படத்தின் டிரைலருக்கு பின்புகதியில் பேசி இருக்கின்றனர் ..இந்தபடத்தின் விளம்பரத்தை கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நான் கருதுகிறேன். எங்கள் கடமையை நாங்கள் செய்துவருகிறோம் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் தமிழர்களே ! இப்படத்தை வெற்றி பெறச் செய்வது நமது கடமை ..எவருக்கும் சந்தேகம் வேண்டாம் எந்த சென்சார் போர்டு தலையெடு இல்லாமல் நமக்கு படத்தில் கத்திரி எங்கும் இல்லாமல் முழு திரைப்படம் வந்து சேரும் வாங்குவதற்கு மட்டும் தயாராகுங்கள் ..விரைவில் உங்கள் கைகளில் படத்தின் உரிமையாளரின் உதவியுடன் உரிமையுடன் உங்களிடம் சேர்ப்பது எங்களின் கடமை ..

  கிழே திரு சீமான் அவர்களும் , வைகோ அவர்களும் இப்படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை வாசித்து பாருங்கள் ..இதை போல் பல படங்கள் வெளிவர நாம் துணை நிற்பதற்கு இப்படத்தை வெற்றி பெறச் செய்வோம் ..!!


  திரு சீமான் இப்படத்தை பற்றி குறிப்பிடுகையில் ...
  ************************************************** *****************************
  தென்க்கோடு என்ற வார்த்தை என்றவுடனே நமக்கு சிந்தனையில் வருவது மூன்று விடயங்கள் நினைவுக்கு வரும் ஒன்று உழைபபிடம் , இருப்பு , கூட்டு வாழ்க்கை .தேன்களுக்கும் , தென்கூட்டுகளுக்க � �ம் பொருந்தும் இந்த வார்த்தை ஈழத்தில் எம்மின உறவுகளுக்கும் அப்படியே பொருந்துகின்றது . ஒரு பாதுகாப்பான தேன்கூட்டை கலைக்கும் பொழுது அந்த தேனிக்களுக்கு எவ்வளவு தவிப்பும் துடிப்பும் நேர்ந்திடுமோ அதைவிட பன்மடங்கு அதைப்போலவே ஈழ மண்ணில் என் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தவிப்பையும் , துடிப்பையும் அனுபவித்து வருகின்றனர் . துன்பத்தை களைவது கடந்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பெற்ற துன்பத்தை பதிவு செய்வது .

  60 ஆண்டுகளுக்கு மேலாக எம் தாய்த் தமிழ் ஈழ உறவுகள் வீரம் செறிந்த விடுதுலை போராட்டத்தை துளி கூட கலப்பிடம் இல்லாத உண்மைக் காவியத்தை இயக்குனர் இகோர் இயக்கிய திரைப்படம் தான் " தேன்கூடு " திரைப்படம் . அதற்காக இது ஆவணப் படம் அல்ல , அணைத்து தமிழர்களும் ஆவன்படுதிக்கொள்ள வேண்டிய படம் தான் " தேன்கூடு ".!

  ஒரு கெட்ட வைப்பாக இப்படம் இந்திய ( தமிழ்நாடு ) இலங்கையை தவிர எல்லா நாடுகளிலும் வெளியடபடுகிறது . எம் இனத்தின் ப்றேச்சனைக்கான தொடக்கம் இந்த படத்தில் சொல்லப் படுகிறது அதற்கான முடிவுகளையும் இந்த படத்தில் சொல்லபடுகிறது இந்த தேன்கூடு படத்தில் .

  தமிழ் தேசிய இனத்தின் மீது சிங்கள அரசு செய்யும் அடக்குமுறை , ஒடுக்குமுறை இதனால் நீண்ட நெடிய காலம் எம் ஈழ மக்கள் அனுபவித்து வந்த வலி , வேதனை , காயங்கள் , தூக்கிச் சுமந்து வந்த துயர துன்பம் , இவற்றோடு எம் ஈழ மக்கள் கொண்டிருக்கிற உணமையான , நியாயமான கோபம் இவற்றை எல்லாம் பதிவு செய்வதோடு , நம் இனத்திற்கான வீரம் , அன்பு , காதல் , கலை விளையாட்டு , பண்பாடு , வாழ்க்கை முறை பெருமைக்குரிய தமிழகளின் அடையாளங்கள் இவற்றை எல்லாம் இந்த தேன்கூடு படம் பதிவு செய்து இருக்கிறது .

  இன்றைக்கு எம் தாய்த் தமிழ் ஈழம் தரிசாய் போனது , ஈழ தமிழ் தேசம் முழுவதும் சிங்கழ்மயமாய் போனது , எம் ஈழ நாடே சுடுகாடாய் போனது ..எம் ஈழ இன மொத்தமும் பிணமாய் போனது ..!!

  அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு கேட்டு போராடிய ஈழ மக்கள் , ஆடை இன்றி அம்மனமாய் இழிவான சாட்சியங்களாக உலக அரங்குகளிலே ..
  சுதந்திரம் கேட்டு போராடிய எம் மக்கள் இன்று சோறு கேட்டு போராடும் அவல நிலை .!

  பிறந்து , வளர்ந்து சுதந்திரமாய் வாழ்ந்த எம் மக்கள் இன்று முறவெளிக்கு இடையில் சிறையில் இன்று .நாங்கள் வீழ்ந்தோம் ஒருவர் விழ ஒன்பது பேர் எழுந்து போராடுவோம் . விழுதல் என்பது நாம் அலுவதற்காய் அல்ல நாம் எழுவதற்காய் என்பதை என் மக்கள் நிருபித்துவருகின � �றனர் .

  தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து திமிர் கொண்டு மேலே எழுகிறது ..
  வெறும் காற்று நிரப்பட்ட பந்தே எழுகிறது என்றால் , உணர்சிகளால் நிரப்பப்பட்ட மரத் தமிழன் இவ்வுலகத்தில் எழுந்து நிற்பது சுலபம் .
  வெட்ட வெட்ட வாழையே திளைக்கும் பொழுது தமிழன் திளைக்கமாட்டனா.,.,.? என்கிறார் சீமான் ..

  பலியாகிப்போன கிராமத்தில் இருந்து புலியாகி போனவனுடிய வரலாறு தான் இந்த " தேன்கூடு " திரைப்படம் என்றார் திரு சீமான் ....!!
  தேன்கூடு வெறும் திரைப்படம் அல்ல எம் இனத்தின் அடையாளத்தின் வரலாற்றுப் படம் . இந்த அறிய படத்தை இயக்கிய தமிழக இயக்குனர் இகோர் ( DIr IGORE ) பணியாற்றவில்லை கடமையாற்று இருக்கிறார் என்று தனது அறிக்கையில் வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருகினப்பாளர் திரு .சீமான் அவர்கள் ..!!!!!!

  (sorry i cant attach the vidio)

 8. #8
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

  தெரியாததை தெரிந்து கொள்வோம்
  தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்


  வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

  தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்கள ல் பயன்படுத்தப்படுவ ு USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
  இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிட ம் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

  இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங் ள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

  1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

  2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

  3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

  4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

  5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கு ் Space சரியாககொடுக்கவும .

  ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்க ் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

  ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

  உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

 9. #9
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  .ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!

  அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதால், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏன...ெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன ். மேலும் பல...ர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.

  அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகிறேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற்றும் பல செயல்களாலும், ஆண்களின் அழகானது பாதிக்கப்படுகிறத . இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல்லவில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களை தவிர்த்து, அழகுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது. சரி, இப்போது அத்தகைய அழகைக் கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங்கள்.

  குப்புற தூங்குவது

  தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்

  மாய்ச்சுரைசரை தவிர்ப்பது

  மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்க ். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிட ம். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது.

  சோப்பு

  ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிட வதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.

  புகைப்பிடித்தல்

  அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும். அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

  மொபைல்

  மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

  பொடுகு

  ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம், பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  சூரியஒளி

  ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவத டு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

 10. #10
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  ...தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள் து.


  மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர் ள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.


  அந்த வலியானது மேல் கைமுதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்னசெய்யலாம்...?

  துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

  இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்மிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..

  பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

  இந்த தகவலை உங்கள் நண்பர்களிடத்திலு ் பகிருங்க...! 11. #11
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  யானைகளை பற்றிய சில வியப்பூட்டும் செய்திகள்:-
  1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

  2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.

  3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

  4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

  5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

  6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

  7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

  8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.

  9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

  10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

  11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

  12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

  13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

  14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

  15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

  16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

  17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

  18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

 12. #12
  Join Date
  Jun 2010
  Location
  india
  Posts
  6
  mm Sittargalum solli irukarkala great
  Last edited by Frowly; 21-12-2012 at 05:06 PM.

 13. #13
  Join Date
  Sep 2011
  Location
  SHARJAH
  Posts
  489
  [/IMG]

  கிறிஸ்துமஸ் சிலஅரிய தகவல்கள்;

  •தமிழ் மொழியில் முதன்முதலில் பைபிளை எழுதியவர் "சீகன்பால்' ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்தபோதுதான் அதை எழுதினார்.
  •யேசுபிரான் பற்றி கவிதை நூல் எழுதியவர் கிருஷ்ண பிள்ளை இவருக்கு "கிறிஸ்துவ கம்பர்' என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
  •உலகிலேயே மிகப் பெரிய தேவாலயம் வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம் ஆகும்.
  •உலகிலேயே மிகச் சிறிய தேவாலயம் அமெரிக்காவின் கோரிங்டன் கென்ட்டரி நகரில் உள்ள மெüண்ட் கேசினா ஆகும்.
  •இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்ச் கோவா மாநிலத்திலுள்ள "தி செ கதீட்ரல்' என்னும் தேவாலயம் ஆகும்.
  •இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவாலயம், கேரள மாநிலத்திலுள்ள புனித தாமஸ் தேவாலயம் ஆகும்.
  •ஜெருசலத்தில் உள்ள ஒலிவ மலை ஆலயத்தில் 68 மொழிகளில் யேசு அருளிய ஜெபம் சுவர்களில் பொறிக்கப்பட்டுள் து. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்று.
  •கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந து 20 கி.மீட்டர் தொலைவிலுள்ள நெய்யூர் என்னும் ஊரில் ஒரு தெருவின் பெயர் - கிறிஸ்துமஸ் தெரு.
  •உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது யேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் அன்றுதான்.
  •கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள "சுங்கர்ன கடை' என்ற இடம் நாகர்கோவிலிலிருந து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலுவைக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருட்பிரசாதமாக வேப்பிலை வழங்கப்படுகின்றத .
  •திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள "தோமையார்புரம்' புனித தோமையார் தேவாலயத்தில் பக்தர்கள் வீடு பெருக்கும் "விளக்குமாற்றை' காணிக்கையாக செலுத்துகின்றனர். அப்படி விளக்குமாறை காணிக்கை செலுத்தினால், உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் நீங்கிவிடும் என்பது பக்தர்
  களின் நம்பிக்கை.
  •தாம்ஸன் என்ற ஓவியர் தான் வரைந்த ஓவியத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்தினை இங்கிலாந்து அரசருக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அரசர் அந்த ஓவியரைக் கொண்டு பல ஓவியங்களை வரையச் செய்து பலருக்கு அனுப்பிவைத்தார். "லூயிஸ் பிராங்' என்பவர்தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தார்.
  •கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து யேசுவை வணங்கும் வழக்கம் ஜெர்மானியர்களிடம ருந்து வந்தது.
  •டென்மார்க் நாட்டில், கிறிஸ்துமஸ் விருந்தில் முதலிடம் வகிப்பது அரிசி உணவுதான்.
  •கிறிஸ்துமஸ் என்ற சொல் கி.பி. 1131-ல் இருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
  •ரோம் - வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவர் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை.
  •"கிறிஸ்துமஸ்' என்னும் பெயரைச் சூட்டியவர் "கிளமண்ட் முடே' என்ற அமெரிக்க பெண்மணி ஆவார்.
  •கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையைத் தோற்றுவித்தவர் அசீசீ நகரில் வாழ்ந்த "புனித பிரான்சிஸ்' என்ற துறவியாவார்.
  •யேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், அதை நினைவுப்படுத்தும பொருட்டுதான் மாட்டுக்
  கொட்டகை போன்ற குடில் அமைக்கப்படுகின்ற ு. அதேசமயத்தில் இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாடுகளை குளிப்பாட்டி அழகுசெய்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  •போப்பாண்டவர் வசிக்கும் நகருக்கு வாடிகன் என்று பெயர். வாடிகன் என்றால் "கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்' என்று பொருள்.
  •"போப்' என்ற சொல் "பாபா' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
  •கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
  •19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் இளவரசர் ஆல்பர்ட்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தார்.
  •கிறிஸ்துமஸ் பிறப்பை நிர்ணயித்த ஆண்டு, கி.பி. 386, டிசம்பர் 25, புதன்கிழமை ஆகும்.
  •கிறிஸ்துமஸ் என்ற திருநாளுக்கு எக்ஸ்மஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் உள்ள X என்ற எழுத்து கிறிஸ்துவையும் MASS என்பது கூட்டத்தையும் குறிக்கும் வார்த்தைகள். கிறிஸ்துமஸ் பிறந்த நாளில் அவரை வணங்கக்கூடிய கூட்டத்தையே கிறிஸ்துமஸ் என்று அழைக்கின்றனர்.
  •யேசுவின் முதல் உருவப்படத்தை வரைந்தவர் புனித லூக்காஸ் என்ற யேசுவின் சீடரே! முதல் ஓவியம் இத்தாலியில் புனித பர்தலோமேயு தேவாலயத்திலும் மற்றொரு படம் போப்பாண்டவரின் அரண்மனையிலும் இடம்பெற்றுள்ளன.
  •உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட ட நூல் பைபிள் ஆகும்.
  •இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட டது.
  •உலகின் மிகப் பெரிய பைபிள் 8043 பக்கங்களையும் 500 கிலோ எடையும் கொண்டது.
  இந்த பைபிள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது
  [B][I]"YOU AT ONCE FEEL IN YOUR HEART THIS PRESENCE,THIS FORCE,THIS GRACE,THAT IS ALWAYS WITH YOU " [/I][/B]

  :p :p :p

 14. #14
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877
  great

  welcome post more informations .


  Quote Originally Posted by sankar View Post
  [/IMG]

  கிறிஸ்துமஸ் சிலஅரிய தகவல்கள்;

  •தமிழ் மொழியில் முதன்முதலில் பைபிளை எழுதியவர் "சீகன்பால்' ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்தபோதுதான் அதை எழுதினார்.
  •யேசுபிரான் பற்றி கவிதை நூல் எழுதியவர் கிருஷ்ண பிள்ளை இவருக்கு "கிறிஸ்துவ கம்பர்' என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
  •உலகிலேயே மிகப் பெரிய தேவாலயம் வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம் ஆகும்.
  •உலகிலேயே மிகச் சிறிய தேவாலயம் அமெரிக்காவின் கோரிங்டன் கென்ட்டரி நகரில் உள்ள மெüண்ட் கேசினா ஆகும்.
  •இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்ச் கோவா மாநிலத்திலுள்ள "தி செ கதீட்ரல்' என்னும் தேவாலயம் ஆகும்.
  •இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவாலயம், கேரள மாநிலத்திலுள்ள புனித தாமஸ் தேவாலயம் ஆகும்.
  •ஜெருசலத்தில் உள்ள ஒலிவ மலை ஆலயத்தில் 68 மொழிகளில் யேசு அருளிய ஜெபம் சுவர்களில் பொறிக்கப்பட்டுள் து. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்று.
  •கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந து 20 கி.மீட்டர் தொலைவிலுள்ள நெய்யூர் என்னும் ஊரில் ஒரு தெருவின் பெயர் - கிறிஸ்துமஸ் தெரு.
  •உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது யேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் அன்றுதான்.
  •கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள "சுங்கர்ன கடை' என்ற இடம் நாகர்கோவிலிலிருந து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலுவைக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருட்பிரசாதமாக வேப்பிலை வழங்கப்படுகின்றத .
  •திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள "தோமையார்புரம்' புனித தோமையார் தேவாலயத்தில் பக்தர்கள் வீடு பெருக்கும் "விளக்குமாற்றை' காணிக்கையாக செலுத்துகின்றனர். அப்படி விளக்குமாறை காணிக்கை செலுத்தினால், உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் நீங்கிவிடும் என்பது பக்தர்
  களின் நம்பிக்கை.
  •தாம்ஸன் என்ற ஓவியர் தான் வரைந்த ஓவியத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்தினை இங்கிலாந்து அரசருக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அரசர் அந்த ஓவியரைக் கொண்டு பல ஓவியங்களை வரையச் செய்து பலருக்கு அனுப்பிவைத்தார். "லூயிஸ் பிராங்' என்பவர்தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தார்.
  •கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து யேசுவை வணங்கும் வழக்கம் ஜெர்மானியர்களிடம ருந்து வந்தது.
  •டென்மார்க் நாட்டில், கிறிஸ்துமஸ் விருந்தில் முதலிடம் வகிப்பது அரிசி உணவுதான்.
  •கிறிஸ்துமஸ் என்ற சொல் கி.பி. 1131-ல் இருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
  •ரோம் - வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவர் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை.
  •"கிறிஸ்துமஸ்' என்னும் பெயரைச் சூட்டியவர் "கிளமண்ட் முடே' என்ற அமெரிக்க பெண்மணி ஆவார்.
  •கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையைத் தோற்றுவித்தவர் அசீசீ நகரில் வாழ்ந்த "புனித பிரான்சிஸ்' என்ற துறவியாவார்.
  •யேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், அதை நினைவுப்படுத்தும பொருட்டுதான் மாட்டுக்
  கொட்டகை போன்ற குடில் அமைக்கப்படுகின்ற ு. அதேசமயத்தில் இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாடுகளை குளிப்பாட்டி அழகுசெய்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  •போப்பாண்டவர் வசிக்கும் நகருக்கு வாடிகன் என்று பெயர். வாடிகன் என்றால் "கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்' என்று பொருள்.
  •"போப்' என்ற சொல் "பாபா' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
  •கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
  •19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் இளவரசர் ஆல்பர்ட்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தார்.
  •கிறிஸ்துமஸ் பிறப்பை நிர்ணயித்த ஆண்டு, கி.பி. 386, டிசம்பர் 25, புதன்கிழமை ஆகும்.
  •கிறிஸ்துமஸ் என்ற திருநாளுக்கு எக்ஸ்மஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் உள்ள X என்ற எழுத்து கிறிஸ்துவையும் MASS என்பது கூட்டத்தையும் குறிக்கும் வார்த்தைகள். கிறிஸ்துமஸ் பிறந்த நாளில் அவரை வணங்கக்கூடிய கூட்டத்தையே கிறிஸ்துமஸ் என்று அழைக்கின்றனர்.
  •யேசுவின் முதல் உருவப்படத்தை வரைந்தவர் புனித லூக்காஸ் என்ற யேசுவின் சீடரே! முதல் ஓவியம் இத்தாலியில் புனித பர்தலோமேயு தேவாலயத்திலும் மற்றொரு படம் போப்பாண்டவரின் அரண்மனையிலும் இடம்பெற்றுள்ளன.
  •உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட ட நூல் பைபிள் ஆகும்.
  •இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட டது.
  •உலகின் மிகப் பெரிய பைபிள் 8043 பக்கங்களையும் 500 கிலோ எடையும் கொண்டது.
  இந்த பைபிள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது

 15. #15
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  பக்கிங்ஹாம் கால்வாய்"
  சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

  ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

  1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகப் பட்டு இருக்கிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்கு ் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

  MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

  பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

  ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •