கனவுதான் என்பது
விழித்தபிறகே தெரிவது.
விடிந்தது என்பது
உதித்தபிறகே தெரிவது.
வலி என்பது
உணர்ந்தபிறகே தெரிவது .
ஆணும் பெண்ணும்
பிறந்தபிறகே தெரிவது.
முடிந்தது என்பது
இறந்தபிறகே தெரிவது .
அழுகையும் சிரிப்பும்
அனுபவித்தே தெரிவது .
நிழலின் அருமை
நின்றபிறகே தெரிவது.
தாயின் பாசம்
தளர்ந்த பிறகே தெரிவது
தந்தை வளர்ப்பு
தன்நிலை உணர்ந்தே தெரிவது.
நட்பு என்பது
பிரிந்த பிறகே தெரிவது .
நாளை என்பதை
எப்படித்தான் அறிவது?