Results 1 to 3 of 3

Thread: நண்பன் வீட்டில் என் மனைவி..?

 1. #1

  Red face நண்பன் வீட்டில் என் மனைவி..?  வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்…

  ஜெய*ந்த் மூர்த்தியின் ந*ண்ப*ன். இன்னும் திரும*ண*மாக*வில்லை. மூர்த்திதான் ஜெய*ந்த் அருகிலேயே இருக்க*ட்டும் என்று த*ன் வீட்டிற்கு பின்னாலேயே வீடு பார்த்துக் கொடுத்தான். த*னி வீடு. ஜெய*ந்த் த*னியாக*த்தான் வ*சிக்கிறான். அவ்வ*ப்போது அவ*ன் பெற்றோர் வ*ந்து பார்த்துவிட்டு செல்வ*ர். வார* முடிவுக*ளில் ஜெய*ந்த் மூர்த்தி வீட்டில் தான் இருப்பான்.

  கமலாவின் தோழி மாலா மட்டும் கமலாவின் செல்ஃபோனுக்கு கால் செய்திராவிட்டால், இந்த விஷயம் தனக்கு தெரியவே வந்திருக்காது. மார்க்கெட் செல்வதாக சொல்லி வெளியேறினாள் கமலா. சிறிது நேரத்தில் மாலாவின் அழைப்பு கமலாவின் சென்ஃபோனுக்கு. மறந்து வைத்து விட்டு வெளியேறி விட்ட கமலாவிடம் நேரிலேயே கொடுத்து விடலாம் என மூர்த்தி செல்ஃபோனை எடுத்துக் கொண்டு பின்னாலேயே தெருவில் இறங்க, கமலா ஓட்டமும் நடையுமாய் பூனையிடம் சிக்காமல் ஓடும் எலி போல சென்றதைப் பார்த்ததும் துணுக்குற்றான். ஏன் இத்தனை பதட்டமாய் போகிறாள் என்று. சற்றே மறைவாய் பின் தொடர்ந்த போது, அவள் பக்கத்து தெருவில் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்க்குள் நுழைவது தெரிந்தது.

  பக்கத்து தெருவானாலும் வலது வரிசையில் ஜெயந்தின் வீடு, மூர்த்தி வீட்டின் பின்புறம் தான் வரும். கொள்ளையிலிருந்து பார்த்தால் ஜெயந்த் வீடு தெளிவாகத் தெரியும். தோலுக்கு சற்று மேல் வரை நீண்ட மதில்சுவர் தான் இடையில். துப்பறியும் நோக்கில் அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மூர்த்தி மறைந்திருந்து ஜெயந்தின் வீட்டைப் பார்க்க, ஜெயந்தின் வீட்டு கொல்லைக் கதவு, சன்னல் என எல்லாமும் மூடப்பட்டிருந்தத . எப்போதும் மூடாத கதவுகள் அவை.

  மூர்த்திக்குத் தான் நின்றிருக்கும் தரையில் பாதங்கள் சேராமல் வழுக்குவது போலிருந்தது. தன் காதல் மனைவியை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை. அவனுள் பல கேள்விகள். ஒன்றிற்கும் விடை இல்லை. இடிந்து போய் உட்கார்ந்திருந்த ன். 2 மணிக்கு திரும்ப வந்தாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்துக் கொண்டாள். ‘பொய் சொல்கிறாளே, இவளை…’ மனதிற்குள் கருவிக் கொண்டே அமைதி காத்தான் மூர்த்தி. அன்றிரவு மெல்ல மனைவியை அணைத்தான். வேண்டாமென்று தள்ளிப் படுத்துக் கொண்டே சோர்வாக இருப்பதாக காண்பித்துக் கொண்டாள். மூர்த்தி சுருங்கிய புருவத்தை சீராக்கினான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது. முதலில் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

  மறு நாளும் அதே 12 மணிக்கு மார்க்கெட் செல்வதாக சொல்லிவிட்டு வெளியேறினாள். மூர்த்தி ஜெயந்தின் வீட்டை கவனித்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. 2 மணி வாக்கில் கமலா வீட்டிற்கு சோர்வாய் வந்தாள் சில மளிகை சாமான்களுடன். அன்றும் மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்தாள். அன்றிரவு மூர்த்தியின் அணைப்பிற்கும் அதே சோர்வைக் காரணம் காட்டிப் புரண்டு படுத்தாள்.

  மூர்த்தி முடிவு செய்து கொண்டான். நாளை கையும் க*ள*வுமாக* பிடிக்க* வேண்டும், முச்ச*ந்தியில் நிற்க* வைத்து நாற*டிக்க* வேண்டும். எத்த*னை பெரிய* துரோகி இந்த* ஜெய*ந்த். அவ*ன் முகத்திரையை கிழிக்க* வேண்டும்.

  ம*று நாளும் 12 ம*ணிக்கு க*ம*லா மார்க்கெட் செல்வ*தாய் சொல்லிவிட்டு வெளியேறினாள். ஜெயந்த் வீட்டை பார்த்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. மூர்த்தி ச*ட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். ச*ரியாக* 5 நிமிட* இடைவெளி விட்டு அவ*ளை ம*றைவாக* பின் தொட*ர்ந்தான். அவ*ள் ஜெயந்த் விட்டிற்குள் நுழைந்தாள்.

  அவ*ள் உள்ளே சென்று சில* ம*ணித்துளிக*ள் க*ட*ந்த*தும் பின்னாலேயே மூர்த்தி பூனை போல* வீட்டு வாச*லுக்கு வ*ந்தான். வாச*லில் க*த*வு விசால*மாய் திற*ந்திருந்த*து. ‘கொல்லைக் க*த*வை சாத்தி விட்டு முன் க*த*வை சாத்த* ம*ற*ந்து விட்டார்க*ளா இன்று? இருக்க*ட்டும். என்ன*தான் ந*ட*க்கிற*து பார்ப்போமே’ என்று க*ருவிய*ப*டியே மெல்ல* உள்ளே எட்டிப்பார்த்தான .

  க*ம*லா, கிச்ச*னில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க*, ஜெய*ந்த் சில* இனிப்பு வ*கைக*ளை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். தான் எதையோ நினைத்திருக்க வேறு ஏதோ ந*ட*க்கிற*தே என்று எச்ச*ரிக்கையான* மூர்த்தி க*த*விடுக்கில் ஒளிய*, க*ம*லா பேசும் ஓசை கேட்ட*து ‘அவ*ருக்கு ச*ர்க்க*ரை பாகு, கேச*ரி, அல்வானா ரொம்ப* புடிக்கும். நாளைக்கு இந்நேரம்லாம் மேரேஜ் ஆகி எங்க*ளுக்கு அஞ்சாவ*து வ*ருஷ*ம். அதான் அவ*ருக்கு ச*ர்ப்ரைஸா இருக்க*ட்டுமேன்னு உங்க* வீட்ல* செஞ்சேன். நாளைக்கு விடிகாலைல* 7 ம*ணிக்கு கொல்லைப்புற*மா இதையெல்லாம் குடுத்துடுங்க* ஜெய*ந்த். அப்ப*டியே நீங்க*ளும் 8 ம*ணிக்கு வீட்டுக்கு வ*ந்திடுங்க எங்க* அனிவ*ர்ச*ரிக்கு. உங்களுக்குதான் சிரமம் கொடுத்திட்டேன்’ என்ற*வ*ளிட*ம், *’அத*னால* என்ன* அண்ணி ப*ர*வாயில்ல*’ என்று ப*தில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய*ந்த்.

  அப்போதுதான் மறு நாள், தன் மாரேஜ் அனிவர்சரி என்பது மூர்த்திக்கு நினைவுக்கு வந்தது.

  மூர்த்தி தான் வ*ந்த* சுவ*டே க*ள்ள*ங்க*ப*ட*மில்லா த* இந்த* இருவ*ருக்கும் தெரிந்து விட*க்கூடாது என* ப*த*ட்ட*மானான்.

 2. #2
  Join Date
  Feb 2011
  Posts
  11,153
  thenga ama enna ethu parka essay mathiri eruku thenga vitu entha year nenga pass panniduvinga

  hahah enthu marks adhikam kodupanag becoz padika matanga ennada paiyan evalavu eluthi erukanu

  neechi marks koduthuuvanga nechama enaku tamil therincha entha essay ya nan paper la pottu erupa hahah  Massive chunk of wild honeycomb!.jpg


  thenaga unalukaa forest la erunthu fresh order kodu ready panna hahahaha
  >><<ROJA>><<
  >><<Life Is Short Make It Sweet>><<

 3. #3
  Rosa..nee chinna pulla...unaku vivaram pothathu.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •