வானத்து நிலா
வளர்பிறையில் பெளர்ணமியாய்
முழுநிலவாய் பூரிப்புடன்
மரங்களுக்கிடையில மறைந்தும்
மறையாமலும்
வெளிச்சத்தை அள்ளிக்கொடுத்த
அந்த இரவின் மூச்சில் !
இந்த ஏழை பெண் இவளின்
கந்தல் சேலையை விழுங்கி
அவளின் உடலில் கவர்ச்சியை
பதித்த நிலவோ !!
அவளின் மார்பிற்கிடையில் நுழைந்து
முன்னேற்றமாய் இடையில் விழுந்து
இன்னும் முன்னேறியதோ !
ஐயப்பாடுகளுடன் அந்த கள்ள நிலா
அவள் முன் தன்னை
ஆண் என........
சிந்திக்க வைத்து சென்றது
ஏழ்மையின் கொடுரமோ ??