அழகான உலகினை
அன்புடன் வழிநடத்த
அவதாரம் கொண்டவர்கள்
நம்மை கருணையில் ஆண்டவர்கள்

அவதாரத்தின் அசல் பொருள்
எங்கும் நிறைந்திருக்க எண்ணி
தன் உருவத்தின் நகல்களை
உலகத்தில் படைத்தது விட்டனர்
மனிதர்கள் என்னும் பெயருடன் ..

கருணை என்பது கடவுளின் நிழல்
அன்பு என்பது ஆண்டவனின் முகம்
பரிவு என்பது பகவானின் குணம்

பிறர் மீது நீங்கள்
அன்பும் அக்கறையும்
அள்ளி வழங்கிடும் நேரம்
ஆண்டவன் உங்களின்
அருகினில் வருகிறார்

இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆதவன்