மேகங்கள்
தாகத்தை தணித்துக் கொண்டிருக்க
தேகங்களும்
தாகத்தை தணித்துக் கொள்ள
முயன்று கொண்டிருக்கின்றன..


மழை
தொடர்ந்து
பெய்து கொண்டிருக்கிறது..
எந்த மழை
முதலில் ஓயுமென
மழையில் நனைந்த மரமது
கிளைகளிடம் இலைகளிடமும்
விவாதித்துக் கொண்டிருக்கிறது..குடையும் உடையும்

தத்தம் பணிசெய்து
தோற்றுப் போகிறது..


உதடும் உடலும்
முத்தம் தனை பெய்து
வெற்றி பெறுகிறது..


மண்ணிற்கு
மழை தரும் முத்தத்திற்கும்
பெண்ணிற்கு
அவன் தரும் முத்தத்திற்கும்
போட்டியென்னவோ
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது...