நீ கிழித்தெறிந்த
காகிதங்களில் என்
கண்ணீர் மழை....

நீ விட்டு சென்றதால்
என் வாழ்க்கை முழுதும்
காதல் பிழை ...

மடல்கள் பல அனுப்பினேன்
உன்னிடமிருந்து பதில்
ஏதும் இல்லை .....

தாமதமாக தெரிந்த ஓர் உண்மை
நீ என் கடிதங்களை
கண்டு கொள்ளவே இல்லை .....

வேர் இல்லாத மரம்
வாழ்வது கிடையாது ....

நீயின்றி நான் மட்டும்
வாழ்வது எப்படி ?

இத்தனை நாள்
நாம் என்றே என்
26 வயதை கடந்தேன் .....

இப்போது நான் மட்டுமே
என்பதை நினைக்கும் போதே
இறந்தேன் ......

பாலை வனத்தில்
குடி நீர் குழாய்
இலவசம் போல் ....

ஆனோம் நானும்
என் காதலும் .....

பழகிய நாட்களை
மறக்க தெரிந்து இருந்தால் ......

நான் தப்பித்து
தப்பியிருப்பேன் ......

ஞாபகம் என்னும்
நரகத்தின் பிடியில் இருந்து ......

அன்று கோவில்கள் சுவர்கள் முழுதும்
நம் பெயரை தாங்கிடும்
சிலைகளாய் இருந்தது ......

இன்று தோல்வி கண்டு உடைந்து
சேராத நம் காதல் சொல்லும்
சின்னங்களாய் காட்சி அளிக்கிறது ......

வாகனத்தில் செல்லும் போது..
வேகம் குறைக்க வேகத்தடை .....

என் வாழ்வே நீ போன பின் வந்தது
நான் இங்கு வாழ்வதற்கு தடை .....

தெரிந்தே வாழ்க்கையை தொலைத்தும் .....
ஏனோ வெட்டியாய் என் வாழ்க்கையை ......

நாம் என்ற போதிருந்த தைரியம்
நான் மட்டுமே என்றான போது
பயமாகிவிட்டது .......

பிச்சைகாரர்களை விட
அதிகமாக உன்னிடம் கெஞ்சியும்
கிடைக்கவில்லை காதல் எனக்கு .......

யார் காலிலும் விழுகிறேன்
என்று சொன்னதில்லை நான்
உன்னிடம் தவிர ........

அழமட்டுமே முடியும் என்னால்
பிடிக்கவில்லை என்று நீ ......
சொன்னபின்னும் ........

உன் பிஞ்சு விரல்களை பற்றாது
எப்படி என்னால் இவ்வுலகில்
வசித்திட முடியும் ?

அன்று என் ரத்தங்கள் எல்லாம்
காதல் கலந்திருந்தது ....
கவிதை பிறந்தது .......

இன்று ஆல்ககால் மட்டுமே
கலந்திருப்பதாலோ என்னவோ
கண்ணீர் மட்டுமே பிறக்கிறது .....

உனக்கு தெரியுமா ?
எத்தனை முறை நான் கதறி
ஊரே விழித்துக்கொண்டத .....

உனக்கு தெரியுமா ?
என் வீட்டு சுவர்கள் என் தலையால்
உடைக்கப்பட்டது ......

உனக்கு தெரியுமா ?
எனது காலணியால் எத்தனை முறை
என்னை நானே தண்டித்தேன் என்பது .....

உனக்கு தெரியுமா ?
பல நாள் உண்ணாமல்
நான் தெருவில் கிடந்தது ......

உனக்கு தெரியுமா ?
உன்னினைவாலே நான்
இறக்கப் போவது ......

ஹி.....ஹி ....ஹி ......

இதெல்லாம்
தெரிந்தாலும் ....

உன்னிடம்
பெரிய மாற்றம்
ஏதும் இருக்காது ....

என்பது நன்றாக
தெரியும் காதலியே
எனக்கு .......

என் வாழ்க்கை முழுதும்
வறுமையாகிவிட்டது
என் மகிழ்ச்சி .....

வட்டிமேல் வட்டியாக
தினமும் அதிகமாகிறது
என் வருத்தம் .......

சரி ....போகட்டும் ......
உன் ஞாபத்திலே
என் வாழ்க்கை பயணிக்கட்டும் ......

எங்கு செல்கிறேன்
எனத்தெரியாத
இருள் தேசத்தில் ......

தேவதையே நீ வாழ்க !
அன்புடன் ....

உன்னை காதலித்தவன் .....