Results 1 to 12 of 12

Thread: கை விடாதே காதலியே..

 1. #1
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  கை விடாதே காதலியே..
  என்னவள் நடந்து சென்ற

  கடற்க்கரை மணலும் – அவள்

  காலில் விழுந்து கண்ணீர் சிந்துகின்றது

  கொண்ட காதலனை

  கை விடாதே என்று! !


 2. #2
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  உன்னை மறப்பேன் வெறுப்பேன்


  பெண்ணே.....

  நீ என்னை வெறுத்த பின்னும்
  நான் உன்னை நேசிக்கிறேன்...

  என் நினைவுகளை நீ எரித்தபின்னும்...

  உன் நினைவுகள் என்னுள்
  பசுமையாக இருக்கிறது...

  நிச்சயம் உன்னை நான் மறப்பேன்...

  அன்று நான் இறந்திருக்க மாட்டேன்...

  என் தோழிகளை நீ
  வெறுக்கும் நிமிடம் முதல்...

  நான் உன்னை வெறுப்பேன்
  மறப்பேன்.....


 3. #3
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  அன்புத் தோழிக்காக சில வரிகள் ........


  எப்போதுமே என்னுடன் இருந்ததில்லை என்றாலும்,
  என்னை விட்டு ஏனோ நீ விலகியதும் இல்லை !

  தொடர்ந்து என்னுடன் நீ தொடர்பில் இல்லை !
  என் தொடர்பு இல்லாது நீ இல்லை!

  பிரச்சனைகள் யாவும் நீ கலைந்ததில்லை ,!
  என்றாலும் பிரச்சனைகள் ஏதும் எனக்கு வராதிருக்க நீ முயலாமலும் இல்லை !

  "அழும் வரை அழுதிடு " அடுத்த நிமிடம்
  உடனே சிரித்திடு என்பாய்!


  சில சமயம் ..........
  தோள்மீது கை போட்டு நீ என் தோழன் என்பாய்!

  சிலசமயம்........
  கன்னத்தில் அடித்துவிட்டு நான் கோபித்துக்கொண்டா ்
  மழலையாய் பயப்பதாய் நடிப்பாய் !

  நான் கவிதைகள் சொல்லும்போது
  காதைப் பொத்திக்கொண்டு அருமை என்பாய்!

  கண்ணீர்விட்டு நான் அழும்போது,
  காரணங்கள் ஏதுமின்றி நீயும் கரைவாய்!

  என் தேர்வு நாட்களில் எல்லாம் ,
  வெகு சீக்கிரம் எழுவாய்!

  என் தேவைகளை புரிந்து
  புன்முறுவல் தருவாய் !

  முடியாது என்று நான்
  முடங்கும் போதெல்லாம்,

  "முயல் ஆமை " கதை சொல்லியே
  என்னைக் கொல்வாய் ! இருப்பினும்
  இறுதியில் நீயே வெல்வாய் !

  உடைபட்ட கல்லாய் இருந்த என்னை
  "உளியாக" நீ உருமாறி,

  மெல்லச் செதுக்கிச் சிலையாக்கி
  உயிர் தந்தாய்!

  என்னைப் பிடிக்கவில்லை என்று
  சொன்ன "என்னவளை "
  என் எதிரே திட்டித் தீர்த்தாய்!

  ஆனால் எனக்குத் தெரியாமல்
  அவளிடம், தினம் தினம்
  கெஞ்சித் தோற்றாய்!!!

  என்னவளின் திருமண நாளை
  எனக்குத் தெரியாது
  மறைக்கப் பார்த்தாய் !

  எனக்குத் தெரிந்த பின்
  என்னைத் தேற்ற இயலாது
  இறுகக் கட்டி அழுது தீர்த்தாய்!

  நல்ல வேலை வாங்கித் தந்தாய்!
  நாளை எப்படி இருக்கும் என்று
  சொல்லித் தந்தாய் !

  ஒரு நாள் திருமண பந்தத்தில்
  கலந்து போனாய்.......


  உன் நண்பனை விட்டு
  பிரிந்து போனாய்.....

  மாறாத நம் நட்பை,
  மறந்தும் போனாய் !
  என்றாலும் .....

  எது நீ செய்தாலும் ,
  அதிலொரு ஏற்றமிகு வினை இருக்கும்
  என்று!

  அமைதியாய் வாழ்ந்து
  கொண்டிருக்கிறேன்
  வாழ்க்கையை.........

  தோழியே நீ
  சொல்லிக் கொடுத்தபடி .........


 4. #4
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  அழைப்பிதல்  உன்னருகில் இருக்க வேண்டிய,
  எனது பெயர்,
  அழைப்பிதழின் உரை மேல்,
  முகவரியாய் களைந்து போய்....!

 5. #5
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  ஒரு ஆணின் கொதிப்பு ...


  பெண்ணே!
  நீ என் காதலை தூக்கி எறிந்ததும் கல் மீது
  விழுந்த கண்ணாடியை போல் பல
  துகள்களாக சிதறியது என் இதயம் .......
  இப்போது தெரிகிறது பல முகங்கள்
  என் இதயத்தில்............
  பெண்ணே!
  நீ இல்லை என்று தாடி வளர்த்து
  தண்ணியடிக்க நானொன்றும்
  தேவதாஸ் இல்லையே ...................


 6. #6
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  காதல் ...


  காதல் ...
  ஒரு இனிய கனவு ....
  தூக்கத்தில் அல்ல
  துக்கத்தில் ...!


 7. #7
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  ஏன் நினைத்தேன்


  என்னை போல உன்னை ரசீத்தவனும் யவனும் இல்லை
  என்னை போல உன்னை நேசீத்தவனும் யவனும் இல்லை
  இன்று என்னை போல என்னை வேறுபவனும் யவனும் இல்லை
  உன்னை ஏன் நினைத்தேன் என்று எண்ணி எண்ணி என்னை அழித்து கொள்கிறேன் என்றும் அன்புடன்

 8. #8
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  நானே நினைத்தாலும்...


  இன்று

  என்னை

  திரும்பிக்கூட பார்க்காத

  உன் விழிகளுக்கும்

  நன்றி சொல்வேன்..!

  ஏனெனில்

  அன்று

  திரும்பத் திரும்பப் பார்த்த

  உன் விழிகளின் காதலை

  அதுதான்

  எனக்கு

  உறுதிபடுத்தியிரு ்கிறது..!
  ஓடாத

  ஒரு சுவர் கடிகாரத்தை

  போல

  தனிமையின் அமைதியை

  குலைக்கவும் வழியின்றி

  வாழ்க்கை சுவற்றில்

  மாற்றப்பட்டு

  நேரம் கேட்கும் பார்வைகளிடம்

  வெட்கமுற்று நகர்கிறது

  என் சமீப காலங்கள்..!
  அடுத்ததாக ஆயும் முன்

  பலவீனத்தில்

  தீண்டும் வரை

  துடிக்காதிருக்கு ்

  பிடிபட்ட

  ஒரு ஆற்று மீனைப் போல

  வெற்றுத் தரையில்

  விட்டம் பார்த்து

  சாய்ந்துகிடக்கிற ன்..!
  கடற்கரையில்

  பதிந்த

  காலடித்தடங்கள் போல

  நங்கூரமிட்டு

  நகராமல் நிற்கின்றன

  என் வாழ்வின் கால்கள்..!
  நினைவுகளில் ஆரம்பித்து

  கனவுகளில் தொடர்ந்து

  விழித்த பிறகும்

  கற்பனைகளில் நீள்கிறது..!

  உன்னுடனான

  என் இடைவேளையற்ற

  உரையாடல்கள்..!
  உறக்கத்தில்

  சத்தமாய் சிணுங்கும்

  அலைபேசி அழைப்பின் மீதும்,

  நேரமாகிவிட்டது என்று

  அதட்டி எழுப்பும் அப்பா மீதும்

  ஏற்படுவது

  கோபத்திற்கு பதில்

  நன்றியாக இருக்கிறது..!
  உன்னை பற்றிய

  கனவுகள் ஒன்றையாவது

  பிடித்து வைத்து ரசிக்க

  தீடீர் விழிப்புகள்தான்

  என் நினைவுக்கு

  துணை நிற்கின்றன..!
  உன் பெயரின்

  முதல் எழுத்தின்

  ஓசையோடும்

  கடைசியெழுத்தின்

  இசையோடும்

  உள்ளிழுக்கப்பட்ட

  வெளிவருகிற

  என் சுவாசத்திலிருந்த

  நானே நினைத்தாலும்

  இனி

  உன்னை

  பிரித்தெடுக்கமுட யாது..!
  கண்கள் மூடினால்

  கண்களுக்கு வெளியேயும்,

  கண்கள் திறந்தால்

  கண்களுக்கு உள்ளேயுமாய்

  காட்சி தந்து

  கண்ணாமூச்சு ஆடுகிறது

  உன் கண்கள்..!
  யாருமற்ற அறையில்

  உன்னிடமும்,

  யாரும் உள்ள அறையில்

  என்னிடமுமாக

  நான் உன்னுடன் பேசுவதாய்

  என்னிடம்

  பேசிக்கொண்டிருக் ிறேன்..!
  எதைத் தூதுவிடுவேன்

  பயப்படுகிற

  உனக்கு தைரியம் சொல்லி..!

  வளர்பிறை நிலவும்

  போதுமானதாக இல்லை

  முழு நிலவான

  உனக்கு தூது அனுப்ப..!
  உயிருள்ள

  என் உடல்

  நலமாகத்தானிருக்க றது..!

  உயிரில்லாத

  என் உயிர் படும்

  வதைதான்

  சொல்ல முடியாததாக

  இருக்கிறது..!

 9. #9
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  விழுந்துவிட்டேன் வாழ்க்கையில்


  பெண்ணே.....

  நான் வீழ்ந்துவிடுவேன்
  என்று ஒருபோதும் நினைத்ததில்லை...

  விளையாட்டில் கூட நான்
  தோற்றுவிட கூடாதுன்னு...

  எப்போதும் விழிப்புடன்
  இருப்பவன் நான்...

  நந்தவனத்தை ரசிப்பவன் நான்
  இன்று ஒற்று ரோஜாவை கூட...

  உன் புன்னகையை கண்ட
  நாள் முதல்...

  விழுந்துவிட்டேன் உன் ஒற்றை
  புன்னகையில் அன்று...

  இன்று...

  நான் வாழ்கையில் விழுந்துவிட்டேன்
  கைகொடுக்க.....?

 10. #10
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877
  ஒரு ஜோடி சிறகுகள்

  ஒரு ஜோடிச்
  சிறகுகள் வேண்டும்
  என்றேன் .

  உல்லாசமாக
  உன்னோடு
  பறப்பதற்கு அல்ல ...

  தொலைதூரம் போய்
  உன்னை
  மறப்பதற்கு !...

 11. #11
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877

  எனக்கு எப்போதும் கிடைக்க மாட்டாய்


  காதல்.....

  நான் காதலிக்கும் போது எதையும் கற்றுக்கொள்ளவில் ை...

  உன்னை நினைப்பதை மட்டும்...

  இன்று...

  என்னைவிட்டு நீ சென்ற பின்
  தெரிந்துகொண்டேன்.. .

  எல்லாவற்றையும் நான்...

  காலங்கள் யாருக்காகவும்
  காத்திருபதில்லைய ம்...

  காலங்கள் கடந்தாலும்
  பெண்ணே நான் உனக்கா
  என்றும் காத்திருக்க...

  கற்றுக்கொண்டேன்...

  நீ எனக்கு எப்போதும்
  கிடைகமாட்டாய்...

  தெரிந்தபோதும்...

  இன்றுமட்டுமல்ல
  என்றும் காத்திருப்பேன்...

  உனக்காக கல்லறையிலும் கூட.....

 12. #12
  Join Date
  Mar 2011
  Location
  muscat
  Posts
  877
  டீக்கடை பெஞ்சில்_ கையில்

  மாலை நேர செய்தித்தாள்

  சுற்றி நண்பர்களின் அரட்டையாய்...

  பனிக்காற்று மெல்ல என்னை வருடி...

  எள்ளி நகையாட....

  தலைநிமிர்ந்தேன்

  என் முன்னால் காதலி...

  தன் கணவனோடு கைகோர்த்து...

  நடை பயின்றாள்... என் மனதில்...

  இதயத்தில் வலி எடுக்க....

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •