என் அவளை எந்நேரமும்
காணவேண்டும் என்பதற்காக
என் வீட்டின் முன் ஜன்னல் வைக்க
-ஆசைப்பட்டேன் .

வாஸ்து சரியில்லை என்றார்
ஜோசியக்காரர்.

என்னவளை எந்நேரமும்
என் இதயத்தில் வைக்க
-ஆசைப்பட்டேன் ,

என் இதயம் சரியில்லை என்றிருந்தால்கூட
என் மார்பை கிழித்து காட்டியிருப்பேன்,

அனால்,
அவள் தந்தையோ!
என் இனம் சரில்லை என்றார்
நான் என்ன செய்வேன் !